மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கந்தையா தியாகலிங்கம்

<!–

மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கந்தையா தியாகலிங்கம் – Athavan News

மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இன்று (ஞாயிற்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்மீனவர்களுக்கு ஒரளவுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது ஆனால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் விவசாயத்துக்குரிய களைநாசினிகள் மற்றும் மருந்துகள்தட்டுப்பாடாக இருப்பதுடன் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றமையால் நியாயமான விலையில் விவசாயத்துக்குரிய உள்ளீடுகளை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply