இலங்கையில் நவீன நரகாசூரன் அழிந்தால்தான் இந்துகளுக்கு தீபாவளி! அருட்தந்தை மா. சக்திவேல்

இலங்கையில் நவீன நரகா சூரன், சூரன்கள் அழிந்தால் தான் இந்துகளுக்கு தீபாவளி என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இந் நாளிலே தீமையை எதிர்த்து நன்மைக்காக யார் போராடுகின்றார்களோ அவர்கள் தீபமாக ஒளிபெறுவார்கள் என்பது இதன் பொருள்.

நராகா சூரணை வதைத்து கொடிய துன்பத்தில் இருந்து மீண்ட நாளை நினைத்து கொண்டடுவதுதான் தீபாவளி .

தமிழர்களின் இனம், நிலம், மொழி, கலாச்சாரம், கல்வியை, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூர்விக நிலங்களை கையகப்படுத்தி, பறித்த நவீன நரகாசூரர்கள் இன்னும் இலங்கையில் வதம் செய்ய படவில்லை.

அவர்கள் என்று ஒழிகின்றார்களோ அன்றுதான் இலங்கை இந்துக்களுக்கு தீபாவளி, எம்மை வறுமைக்குள் தள்ளியவர்கள் எமக்கான அரசியல் அதிகாரத்தை, பொருளாதார பாதுகாப்பபை, அடிப்படை வாழ் வுரிமையை தராதவர்கள் நவீன நரகாசூர்களாக ஒளிந்து இருக்கிறர்கள்.

தமிழர்களின் அதிகாரங்களை நசுக்கும் முயற்சியில் யார் ஈடுபாடுகிறார்களோ, எமது இன, மொழி, நிலம் கலாசாரத்தை ஒழிக்க நினைக்கின்றர்களோ, அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அதற்கன திடசந்தர்ப்பம் எடுக்கின்ற நாளாக இந்த தீபாவளி நாளை அடையாளப்படுத்த வேண்டும். எனவே பல்வேறு அவதாரங்களோடு உலாவுகின்ற அதி நவீனநரகாசூரணை அழித்து புது யுகத்தில் வாழ இன்நன் நாளிள் வாழ்த்துகின்றேன்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply