நிதானமாகவும் சிக்கனமாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள் – இராதாகிருஷ்ணன் எம்.பி

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் நிதானமாகவும் சிக்கனமாகவும் கொண்டாட வேண்டிய ஒரு தீபாவளியாக இது அமைந்திருக்கின்றது என நாடளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழுகின்ற அனைத்து உறவுகளுக்கும் இந்த நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இலங்கை மக்கள் தீபாவளியை மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வந்தார்கள். ஆனால் இம்முறை தீபாவளியை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொண்டாட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாளில் தீபாவளியை கொண்டாடுகின்ற நீங்கள் அனைவரும் மிகவும் அமைதியாகவும் ஏனையவர்களின் மனது புன்படாத வகையிலும் கொண்டாட வேண்டும்.

பலரும் உண்ண உணவில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் நாம் ஆரவாரமாக இந்த தீயாவளியை கொண்டாடுவது அவர்களின் மனதை புன்படுத்தும்.

எனவே இந்த நாளில் உணவில்லாத உங்கள் அயலவர்களுக்கு ஒரு வேளை உணவை கொடுக்க முடியுமாக இருந்தால் அது இந்த தீபாவளியின் மன நிறைவை ஏற்படுத்தும்.சிந்தித்து சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயலாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply