மக்கள் மீது தேவையற்ற வரித் திணிப்பு – சிறீதரன் எம்.பி சாடல்

நாட்டை கொள்ளையடித்தவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டு விட்டு மக்கள் மீது தேவையற்ற வரிச்சுமை விதிக்கப்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

மக்கள் மீது தேவையற்ற வாரிசுமை திணிக்கப்படுகிறது.ஒரு இரவில் விவசாயிகளின் தலையில் இடியைப் போட்டார் கோட்டா.இன்று மக்கள் தவிக்கின்றனர்.விவசாயிகள் உரம் இல்லாமல் அல்லாடுகின்றனர்.

இதற்க்கு பின்னர் வந்த ரணில் விக்கிரமசிங்க என்ன செய்கிறார்.நாட்டை கொள்ளையடித்தவர்களை கைது செய்யாமல்,சட்டத்தின் முன் நிறுத்தாமல் மக்கள் மீது வரிச்சுசுமையை விதிக்கின்றார்.இதனால் மீண்டும் பாதிக்கப்படுவதும் மக்களே.

கடந்த 2019 ஆம் ஆண்டு அளவில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் ஊழல் செய்யப்பட்டு,பல கோடிக்கணக்கான வருமானம் ,தனிநபர்களின் கைகளுக்குள் சென்றது.அதே போன்று எண்ணெயிலும் ஊழல் செய்யப்பட்டு தற்போது நாடு இந்த நிலைமையில் உள்ளது என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply