யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அபேஸ்!

யாழ். கச்சாய் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி உட்பட பெறுமதி வாய்ந்த  கைத்தொலைபேசி என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மதியம் கச்சாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு பேர் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையிட்டதுடன், அவரது கைப்பையினையும் அபகரித்து சென்றுள்ளனர்.

குறித்த கைப்பையில் ஏடிஎம் அட்டை மற்றும் பெறுமதியான கைது தொலைபேசி இருந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply