கந்தளாயில் அதிபரை நியமித்து தருமாறு கோரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட  தி/ அல்தாரிக் தேசிய பாடசாலையில் அதிபரை நியமித்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் பாடசாலை முன்னால் இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அதிபர் ஆசிரியர்களை பெற்றுத்தருமாறு கோரியதோடு, வலயக்கல்வி அதிகாரிகளின் செயற்பாட்டுக்கும் பாடசாலை மாணவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

அதிபரை நியமித்துத்தா, ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய், மற்றும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி போன்ற வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.  

பின்பு கந்தளாய்  வலயக்கல்வி  அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு வருகை தந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிபரை நியமித்து வைத்தார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply