மரணத்தில் முடிந்த மது விருந்து – மூவர் காயம்

கண்டி, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெவன்வத்த பிரதேசத்தில் மது அருந்திக்கொண்டிருந்த இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

லெவன்வத்த, புபுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மூவரும் கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் கலஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புபுரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply