தெய்வமாகிய மஹிந்த – இன்னுமும் நம்பும் அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி இருப்போரை மீண்டும் இணைத்துக்கொள்ளும் தேவை இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தனர். இந்த அணிகளை இணைத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களை புறந்தள்ளி விட்டு அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது. அரசியலில் பலரை இணைத்துக்கொண்டே பயணத்தை முன்னெடுக்க முடியும்.

எதிர்காலத்தில் விரிவான கூட்டணியை அமைக்க வேண்டும். நாங்கள் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதியின் கீழ் பணியாற்றி வருகின்றோம். அவர் பல சாதகமான தீர்மானங்களை எடுத்துள்ளார். நாடு இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வரிசைகள் இல்லை. எரிபொருள், எரிவாயு வரிசைகளை தற்போது காணமுடியவில்லை. மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதியையும் எமது அரசியல் பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply