பணக்காரர்களை ஏமாற்றிய கில்லாடி நடிகைகள் சிக்கினர்

பணக்காரர்களை ஏமாற்றி பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆறு நடிகைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த ஆறு நடிகைகளும் அவரிடமிருந்து பல இலட்சம் பணம் மற்றும் பல்வேறு பெறுமதியான பொருட்களை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்வேறு பணக்கார தொழிலதிபர்கள், உயரதிகாரிகளை மிரட்டி பணம் பெறுவதற்காக இந்த நடிகைகளை திலினி பிரியாமாலி பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பணக்காரர்களுடன் உடலுறவு வைத்து இரகசியமாக வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பணக்காரர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் சில நடிகைகள் பணக்காரர்களை போனில் அழைத்து பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி, ஒலிப்பதிவு செய்து, அதனை வெளியிடுவோம் என மிரட்டி பணம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு செல்வந்தர் ஒருவருடன் குறிப்பிட்ட நடிகை ஒருவர் தொலைபேசியில் ஆபாசமாக பேசிய 04 ஒலிநாடாக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இந்த ஓடியோவும் திலினி ப்ரியாமாலியுடன் இருந்த பிரபல நடிகை ஒருவரால் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நடிகைகளிடம் தீவிர விசாரணை தொடங்கியுள்ளதுடன், பல்வேறு பணக்காரர்களை மிரட்டி அவர்கள் சம்பாதித்த பணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply