
இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கையில் இருந்து தெரியவருகின்றது.
இந்த நிலைமை காரணமாக அவசர மற்றும் பொதுச் சுகாதார சேவைகள் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக, சில வழக்கமான அறுவை சிகிச்சைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இரத்த மாற்று சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. மேலும் குறிப்பாக
இந்நிலைமை பெருந்தோட்ட மக்களுக்கு மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாகவும், தரமான சுகாதார சேவையை பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்

