
இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7:8 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7:8 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளர்ச்சி வேகம் மறைபெறுமானத்தில் வீழ்ச்சியடைந்ததில்லை.
இதன்காரணமாக நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை. டொலரும் இல்லை. இது குறிப்பிட்டவொரு அரசியல்வாதியால் தோற்றம் பெற்ற பிரச்சினை அல்ல.கடனை மீள செலுத்துவதற்காக கடன் பெறப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரையறை காணப்படுகிறது. எனினும் அந்த வரையறையையும் மீறி மேலும் மேலும் கடன் பெறப்பட்டுள்ளது.
தனிநபரொருவருக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகமாகக் காணப்பட்டால் , அவருக்கு கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமையில் ‘என் மரணத்திற்கு நானே காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு , உயிரை மாய்த்துக்கொள்வார். ஆனால் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது– என்றார்.

