ஐ.எம்.எப். நிபந்தனை; மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டணத்தை மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்பபட்டுள்ளது என இலங்கை மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதி தொடர்பில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னர் இந்த மின்கட்டண அதிகரிப்பு அவசியம் என சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் மின்கட்டணத்தை மீள உயர்த்துவது தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை மின்சாரசபை பெருமளவில் மின்கட்டணத்தை அதிகரித்தது. இதன்மூலம் இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபா மேலதிக வருமானம் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply