
இலங்கைக்கு நன்கொடையாக சீனாவால் வழங்கப்பட்ட 500 மெற்றிக் தொன் அரிசித் தொகை அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த அரிசி ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் வாரமளவில் சீனாவின் நன்கொடையில் 500 மெற்றிக்தொன் அரிசிக் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.





