
60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி அடங்கிய மேலுமொரு நிலக்கரி கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது என நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலிலிருந்து நிலக்கரி தரையிறக்கும் பணிகள் இன்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை நிலக்கரி ஒப்பந்தம் செய்யப்பட்ட குறித்த நிறுவனத்திடமிருந்து மேலும் 4 கப்பல்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன் நாட்டை வந்தடையவுள்ளன என நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

