கணனி மற்றும் கையடக்க தொலைபேசி உள்ள விளையாட்டுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரிக்கை! நளின் பண்டார

சில வகை கணனி மற்றும் கையடக்க தொலைபேசி ஒளித்தோற்ற விளையாட்டுகளுக்கு (Video Games) தடை விதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில வகை ஒளித்தோற்ற விளையாட்டுக்களைக் கணினி அல்லது கையடக்க தொலைபேசி வழியாக விளையாடுவதனால் சிறுவர்களின் உள நலம் பாதிக்கப்படுகின்றது என அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமான சிறுவர் சிறுமியர் கணனி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சில வகையான கணனி விளையாட்டுக்களை விளையாடும் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உள நலம் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான ஆபத்தான விளையாட்டுக்களைத் தடை செய்ய அரசாங்கம் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்க வேண்டுமென மேலும் கோரியுள்ளார்.

Leave a Reply