தொடர் வெடிப்புக்களின் எதிரொலி; எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. வேகபிடிய வெளியிட்டுள்ள தகவலின் படி, நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லை.

எனவே, தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply