
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தென்மராட்சி பிரதேசத்திலிருந்து 63 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர் பார்த்திருந்த தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 16,17,18 ஆம் திகதிகளில் முதலாம் கட்ட நேர்முகத் தேர்வு பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்டது.
நேர்முகத்தேர்வில் 100க்கு மேற்பட்டோர் பங்குபற்றிய வேளையில், தேவையான ஆவணங்களை வைத்திருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட 63 பேரையும் வெளிநாடுகளுக்கு முகவர் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்களது பயணம் தொடர்பான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
பிற செய்திகள்

