இலங்கை எதிர்கொள்ளும் என கூறப்படும் எதிர்காலத்தில் உணவு பஞ்சத்தினை குறைக்கும் முகமாக கொழும்பு மாநகர சபையினால் ஆரம்பிக்கப்பட்ட மரக்கறி பயிர்ச்செய்கை திட்டத்தின் முதல் அறுவடை நேற்று (27) காலை இடம்பெற்றது.
மலையகக் காய்கறிகள் உட்பட கத்தரிக்காய், வெள்ளரி, பயற்றங்காய் , பச்சைமிளகாய், மற்றும் எனப் பல பயிர்களின் செழிப்பான விளைச்சல் கொழும்பு நகர மண்டபப் பகுதிலிருந்து கிடைத்துள்ளது .
கொழும்பு மாநகர முதல்வர் திருமதி ரோசி சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட செயல் திட்டமானது மேலும் கொழும்பு நகர எல்லையில் பல இடங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறுவடை கொழும்பு நகரின் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

பிற செய்திகள்

