அரச சேவை ஆட்சேர்ப்பு புதிய திட்டம் அறிமுகம்

அரச சேவைக்கு ஆள்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டமொன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களின் போது உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள் போர் நிறைவடைந்து சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவர்களை அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்பின்போது வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்களால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply