
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயில் இன்று (28) தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, பதுளையில் இருந்து இன்று (28) காலை 10.15 க்கு கொழும்பு கோட்டையை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலின் முதலாவது வகுப்புக்கான பெட்டியொன்று, ஹட்டன் ரயில் நிலையத்துக்கும் ரொசெல்ல ரயில் நிலையத்துக்கும் இடையில் தடம் புரண்டது.
இதனால், நாவலப்பிட்டிக்கும் ஹட்டனுக்கும் இடையிலான சேவையும், பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கான ரயில் சேவையை முன்னெடுப்பதிலும் சிரமங்களுக்கு உள்ளாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்

