
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்றைய தினம் காலை (28) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் உட்பட கைதிகளின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், சிறைச்சாலை சமையலறை மற்றும் தொழிற்சாலை வளாகத்தின் வேலைகளும் விசேட அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டன.
கைதிகள் எதிர்நோக்கும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகள் குறித்தும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்கள், குறிப்பாக நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறவில்லை என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்

