
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடரூந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரேனிய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் வான் தாக்குதலில் உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் படைகளும் சளைக்காமல் பல்வேறு நாடுகளின் இராணுவ ஆயுதங்கள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்

