யாழில் திருட்டுச் சம்பவத்தை முறியடித்தவர்களை கௌரவித்த பலாலி காவல்துறையினர்!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சங்கிலியை அபகரித்த நபரை மடக்கிப் பிடித்தவர்களுக்கு பலாலி காவல்துறையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் காயத்திரி சிறிராம் , திருவள்ளுவர் சனசமூக நிலைய நிர்வாகம் , உதவிப் பொலிஸ் அத்தியட்சர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பின் இணைப்பு)

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில்மேலும் தெரியவருவதாவது

14 வயதுச் சிறுமியொருவர் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி வீதியில் நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுள்ளதுடன் சங்கிலியை காப்பாற்ற குறித்த சிறுமியும் கடுமையாக போராடிய நிலையில் இறுதியில் குறித்த நபரிடம் சங்கிலியை பறிகொடுத்தார்.

இதேவேளை சங்கிலியை பறிகொடுத்த சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து சிறுமியிடம் அத்துமீறிய இராணுவ சிப்பாயை மடக்கிப்பிடித்தனர்.

குறித்த சிப்பாய் இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து அங்குநி்ன்ற பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதேவேளை குறித்த சம்பவத்தை தொடர்ந்து இராணுவச் சிப்பாயும் பொதுமகன் ஒருவனும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply