இலங்கையில் சினிமா ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த 49 திரையரங்குகளில் 10 திரையரங்குகளை அடுத்த மாதம் மீண்டும் திறக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் டி. ஏ கித்சிரியிடம் இதுபற்றி வினவியதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஈட்டிய வருமானம் 2019ஆம் ஆண்டை விட சடுதியாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 191 திரையரங்குகள் செயற்பட்டு வந்தன.

கொவிட்டு தொற்று காரணமாக வருவாய் இழப்பு மற்றும் திரைப்படத் திரையிடல் கட்டுப்பாடுகள் காரணமாக, 49 திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரையரங்கு உரிமையாளர்களுக்கு திரைப்பட மேம்பாட்டு நிதியின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திரைப்படத்துறையின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்பட பார்வையாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் வாடகை வாகன சாரதிகள் வருமானத்தை இழந்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply