இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மநாத சமீர அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
துஷ்மநாத சமீரவுக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 3 மாதங்களில் பின்னர் அவர் இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடுவார் என நம்புகிறோம் எனவும் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மார்க் பிளாக்னியால் குறிப்பிட்டுள்ளார்.