பலாங்கொடையில் பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய கஹவத்த விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் உரிமம் இன்றி வெடிமருந்துகளை வைத்திருந்த 36 வயதுடைய பலாங்கொடை, தஹமன, உலியகம பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 02 மின்சார டெட்டனேட்டர்கள், 435 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள், 1,850 கிராம் துப்பாக்கி பவுடர், 80 ஜெலக்னைட் துண்டுகள் மற்றும் 60 மீட்டர் சர்வீஸ் ஜீரோ ஆகியவை அடங்கும்.
இந்த வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததன் நோக்கம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்

