பொலிஸாரின் துப்பாக்கிக்கு இயக்காகிய மாணவன் – களமிறங்கியது HRCSL!

மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நேற்று பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் இச்சம்பம் இடம்பெற்றிருந்தது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழுவொன்று திஹகொட பகுதியை நோக்கி இன்று செல்லவுள்ளமை குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

Leave a Reply