
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் சில மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இவ்வாறான நிலையில் கொட்டக்கலை, டிக்கோயா, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு, அங்கு தேவையான மருந்துகள் இன்மையால் வைத்தியர்கள் வெளிமருந்தகங்களில் மருந்துகளை வாங்குமாறு பற்றுச்சீட்டு எழுதிகொடுக்கின்றனர்.
எனினும் தற்போது இப்பிரதேசங்களில் தனியார் மருந்தகங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இன்னும் சில ஹற்றன்னை அண்மித்த தனியார்
மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக நோயாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே மருந்துகள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்

