துஷ்மந்த சமீரவுக்கு வெற்றிகரமாக முடிந்த சத்திரசிகிச்சை!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவிற்கு மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு செய்தி வழங்கியுள்ளார்.

இன்னும் 3 மாதங்களில் அவரை வளமை நிலையில் பார்க்களாம் என நம்புகிறோம் எனவும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

Leave a Reply