
நீதிமன்றங்களிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி உரிய எதிர்ப்பு சட்ட நடவடிக்கைக்காவும் தேசத்தின் விடுதலைக்காகவும் உழைத்தவர்கள் வரிசையில் கௌரி சங்கரியின் பெயர் குறிப்பிட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மூத்த சட்டத்தரணி கௌரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாவை சேனாதிராஜா உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையிலே,
மூத்த சட்டத்தரணி கௌரி தவராசா அவர்கள் நோயினால் மறைந்து விட்டார். அவருடைய இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.
இவர் பெண்குலத்தின் தலைவியாகவும், சட்டத்துறையிலேயே மிக உயர்ந்த ஆளுமையுள்ளவராக திகழ்ந்தார். நான் அறிந்த வரையில் அவர் நீதிமன்றங்களில் வாதாடிய பின்னர் அவர் கொடுத்த வழக்குகளை பதிவு செய்து அதை தாக்கல் செய்வதிலேயே சிறந்தவராக விளங்கினார்.
அவர் தன்னுடைய உழைப்பிற்காக இந்த தொழிலை செய்யவில்லை. தான் ஏற்றுக் கொண்ட வழக்குகளை பல துறைகளிலும் பல வெற்றிகளை பெற்றிருந்தார். திரு.தவராசா அவருடைய நிகழ்ச்சி கொழும்பில் நடக்கின்ற போது எனக்கு செய்தி ஒன்று கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்ச்சி மிக சிறப்பாக இலங்கையில் நடைபெற்ற பிரதிநிதிகள், சட்டத்தரணிகள்கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியாக நான் பார்க்க கூடியதாக இருந்தது. அரசியல் தலைவர்கள் சட்டத்துறை மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் அங்கு உரையாற்றினார்.
இந்தியாவிலே இடம்பெற்ற போராட்டத்திலே நூற்றுக்கணக்கான பெண்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் சென்று வாதாடியுள்ளதோடு, அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று போராடியதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பலர் விடுதலை செய்யப்பட்டு இருப்பதோடு இன்னும் சிலர் சிறையில் இருககின்றார்கள். சரியோ பிழையோ நாங்கள் தொலைபேசியில் தான் தவராசா அவர்களுக்கு சொன்னோம், அதுக்கு அவர் சரி என்று சொன்னதாவும், தவராசா பலருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்திருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
நாங்கள் வாதிடுவது சரியா? வழக்குகளை பதிவு செய்யலாம் என்று யோசிக்கின்ற சில பேர் இருக்கின்றார்கள். கௌரி சங்கரி ஒரு பெண்மணி. பொது வாழ்க்கையில் தலைமை தாங்கியவர். சட்டத்துறையிலும் முன்னனி தலைவராக இருந்தவர்.
வழக்கறிஞர் விக்னேஸ்வரன் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து என்னுடைய வழக்கை நடாத்தினார். ஒரு நீதித்துறையிலே சட்டத்துறையிலே ஆற்றல் படைத்தவர்கள் இனத்தின் விடுதலைக்காக தங்களுடைய சந்தர்ப்பங்களின் போராடி இருக்கின்றார். ஜனநாயகத்திலும் போராடி இருக்கிறார்.
அந்த சந்தர்ப்பத்தில் நானும் என்னுடைய வழக்கறிஞரும் கொழும்பிலே வாழுவதற்கு சவால்களில் இருந்த போது கொழும்பு சட்டத்தரணிகள் மத்தியில் அவர்களுக்கு எதிராக வாதிடுவதில் அந்த வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கின்றார்கள்.
அதே போல தான் கௌரி சங்கரி அவர்கள் நீதிமன்றங்களிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி உரிய எதிர்ப்பு சட்டநடவடிக்கைக்காவும் தேசத்தின் விடுதலைக்காகவும் உழைத்தவர்கள் வரிசையில் அவருடைய குறிப்பிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்

