இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது!

1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

மொத்தத்தில், போதைப்பொருள் தொடர்பான 4,561 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு மில்லியன் மக்களுக்கு 79.5 என்ற வீதத்திற்கு சமம்.

தேசியப் புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) இவற்றில் பாதி 2019இல் நிகழ்ந்திருக்கும் என தெரிவித்துள்ளது.

ஏனெனில் இறப்புகளைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தொற்றுநோய்க்கு முன்பே பெரும்பான்மை ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் சமீபத்திய புள்ளிவிபரங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும், மற்றும் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையில் கடுமையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன.

Leave a Reply