ஒமிக்ரான் திரிபு தொடர்பில் 3 வாரங்களில் தெளிவான கருத்தை பெறலாம்! – பேராசிரியர் நீலிகா

ஒமிக்ரான் திரிபு தொடர்பில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவான கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எந்தத் திரிபு கண்டறியப்பட்டாலும், சுகாதார வழிகாட்டல் கோவையைப் பின்பற்றுவது மிக முக்கியமானதாகும்.

ஒமிக்ரொன் கொரோனா வைரஸின் தொற்றை ஏற்படுத்தும் ஆற்றலானது, டெல்டா மற்றும் பீட்டா திரிபுகளுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் கொரோனா நிலவரம் குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த விடயம் கண்டறியப்பட்டதாக தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply