
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடா வருடம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாக பிரகடணப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது. இவ் ஆண்டின் தொனிப்போருளாக “ சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வருதல் [End Inequalities] எயிட்ஸினை தடுத்தல் [End Aid] மற்றும் பிராந்திய ரீதியான தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வருதல் [End Pandemics] என இந் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவை பனிமனை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் COVID சுகாதார கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு அமைவான முறையில் நடாத்தப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசயலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.R.முரளீஸ்வரன் தலமையில் இடம்பெற்றதோடு அவர் தலமை உரையையும்ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.குணசிங்கம் சுகுணன் இந்நோய் சம்பந்தமாக மக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் இந்நோயை கடடுப்படுத்துவதற்குரிய வழிமுறைகள் மற்றும் முன்னெடுப்புகள் சம்பந்தமான உரை ஒன்றை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பாலியல் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் DR.K.A.C.R.விஜயசேகரவின் விழிப்புணர்வு உரையில் இந் நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்கள் தாமாகவே முன் வந்து பரிசோதனைகளும் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதுடன் இது சம்மந்தப்பட்ட சுகாதகர பணிப்பாளர்களின் பங்களிப்பு பற்றியும் உரையாற்றினார். இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவை பணிமனை மற்றும் கல்முனை வடக்கு ஆதாரவைத்திசாலையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்குபற்றியதோடு இராணுவமுகாமின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் சுகாதார கல்விப்பிர்வு பொறுப்பு வைத்திய அதிகார் DR.S.திருமால் தொகுத்து வழங்கியோதோடு இந்நிகழ்வானது பாலியல் தொற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்திய அதிகாரி DR.டில்ஷானவின் நன்றி உரையுடன் நிறைவுற்றது.





