<!–
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
ஜப்பானின் சர்வதேச உறவுகள் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அதற்கமைய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, உணவு பதப்படுத்துதல் துறையில் 20-26 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை 0112 076 446 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






