ஒரே விமானத்தில் வெளிநாடு செல்லும் கோட்டாபய – ரணில்

இந்து மகா சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அபுதாபி செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) கலந்து கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) அதே விமானத்தில் பயணிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

Leave a Reply