உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி: இறுதி ஓவர் வரை பரபரப்பு – பங்களாதேஷ் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் இன்று (30) இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்து முதலில் களமிறங்கியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சாண்டோ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Leave a Reply