
உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, கோட்டே, கொடுபெம்ம ஈரநிலப் பூங்கா, பொதுமக்கள் பாவணைக்காக நாளை கையளிக்கப்படவுள்ளது.
அதாவது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு முற்பகல் 9.30க்கு இடம்பெறவுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் இந்த ஈரநிலப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டது.
இதற்காக சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 25, 2018 அன்று, டுபாயில் நடைபெற்ற ஈரநிலங்கள் தொடர்பான 13வது ரம்சா மாநாட்டில் கொழும்பு நகரம், ரம்சா ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, பெத்தகான, தியசரு, ஹீன் கால்வாய், கொலன்னாவை, கோட்டே மாதின்னாகொட, முல்லேரியா, தலங்கம ஆகிய ஈர நில பூங்காக்கள் இந்த ரம்சா ஈரநிலங்களுக்கு சொந்த பூங்காக்களாகும்.
கோட்டே, கொடுபெம்ம ஈரநிலப் பூங்காவின் மொத்த பரப்பளவு 14 ஹெக்டேயர் ஆகும்.
இது பெத்தகான, ஈரநில பூங்காவின் தொடர்ச்சியாகும்.
பெறுமதி வாய்ந்த ஈரநிலச் சூழலைப் பாதுகாத்து, சேதத்தை குறைப்பதற்கும், சூழலுக்கு உகந்த சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான பூங்காவாக இதைப் பயன்படுத்;த நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்வதே இந்த பூங்காவின் நோக்கமாகும்.
பிற செய்திகள்

