வவுனியாவில் மேலும் ஒரு எரிவாயு அடுப்பு வெடிப்பு

வவுனியா செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம் (02) எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

வீட்டில் இருந்த இல்லத்தரசி கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்கு தயாராகிவிட்டு அதனை இயக்கிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இதன்போது எரிவாயு அடுப்பு ​​திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் பின்னர் வெடித்துள்ளது.

தீபற்றி எரியும்போது வீட்டின் உரிமையாளர் உடனடியாக அயலவரை அழைத்திருந்தார். விரைந்து செயற்பட்ட அயலவர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சிலிண்டரை வெளியில் எறிந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் இரட்டை பெரியகுளம் பகுதியிலும் எரிவாயு அடுப்பு தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply