அகில இலங்கை சம்பியனான கிண்ணியா மத்திய கல்லூரிக்கு இம்ரான் எம்.பி வாழ்த்து!

அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தை தோற்கடித்து  சம்பியனான கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் பல சாதனைகளை படைப்பதற்கு பிராத்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

 மேலும் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிபர், பயிற்சியாளர், பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply