இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நீடிப்பு- பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

<!–

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நீடிப்பு- பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை – Athavan News

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Leave a Reply