
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று அல்லது நாளை எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே எரிபொருள் விலையில் இன்று அல்லது நாளை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

