மைத்திரி – தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொழிற்சங்க சம்மேளனமொன்றின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள ஆர்பாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply