நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது! சபையில் அநுரகுமார

நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதனை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு வங்கிகளில் டொலர்களை விடுவிக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply