மாவீரர் நினைவுக்கூரலும் ஜே.வி.பியின் நினைவுக்கூரலும் ஒன்றல்ல! சபையின் பொன்சேகா தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமும் ஜேவிபியின் கார்த்திகை வீரர்கள் தினமும் ஒன்றல்ல. ஜே.வி.பி நாட்டை பிரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்கு அந்த உரிமையுள்ளது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க இராணுவத்தளபதி கூறியிருந்தமையை சுட்டிக்காட்டியே அவர் இதனை இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்

மேலும், 1980ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 2,500 பேர் இந்தியாவின் 75 ஆயிரம் படையினரை எதிர்த்து சண்டையிட்டனர்.

எனினும், 75 ஆயிரம் இந்திய படையினரால் 2,500 விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்தமுடியவில்லை. .இது இலங்கையர்கள் என்ற வகையில் பெருமைப்படவேண்டிய விடயம்.

நாட்டில் இன்று இருக்கும் படையினருக்கு வாரம் ஒன்றுக்கு ஒருமுறை மாத்திரமே கோழி இறைச்சி வழங்கப்படுகின்றது.

காலையில் பால் தேனீருக்கு பதிலாக வெறும் தேனீர் மாத்திரமே வழங்கப்படுகின்றன. இது தொடர்பில் படையினர் அதிருப்தியில் இருக்கின்றது. இதற்கு நிதியமைச்சே பொறுப்பேற்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை நிறுத்தவேண்டும். இறந்தவர்களை நினைவுக்கூருவதாக கூறி பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமும் ஜேவிபியின் கார்த்திகை வீரர்கள் தினமும் ஒன்றல்ல. ஜே.வி.பி நாட்டை பிரிக்கும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவே அவர்களுக்கு அந்த உரிமையுள்ளது.

வடக்கில் உள்ள சில அரசியல் தலைவர்கள் இந்த மாவீரர் தின நிகழ்வுகளுக்கு ஆதரவளித்து, தென்னிலங்களை மக்களின் அதிருப்தியை உருவாக்குகின்றனர்.

தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையின்போது தம்மை கொலை செய்ய வந்த மொரிஸ் என்பவரை விடுதலை செய்யவேண்டும்.

இலங்கையின் படையினரில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது. ஜெகத் ஜெயசூரிய, கபில ஹெந்தவித்தாரண போன்றோர் தவறு செய்துள்ளார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் ஏனைய படையினரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்கமுடியும்.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட 11 இளைஞர்களை கடத்திச்சென்று கொலை செய்துள்ளார்

கொலை செய்தவர்களை கொலை செய்து கடலில் வீசியதாக தகவல்கள் உள்ளன. எனவே வசந்த கரணாகொட போன்றவர்களை காப்பாற்றவேண்டாம்.

போர் இடம்பெற்றமையை நினைவுப்படுத்தும் முகமாக போர் சின்னமாக ‘சந்தஹிரு சாய’ என்ற நினைவுச்சின்னத்தை உருவாக்கக்கூடாது. அதனை சமாதானத்தை ஏற்படுத்திய சின்னமாக மாற்றவேண்டும்.

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply