சிதறு தேங்காய்போல் சிதறிய மொட்டு கட்சி- அம்பலப்படுத்திய கம்பன்பில!

நாட்டில் தற்போது” அரசியல் செய்ய முடியாததால் பஸில் ராஜபக்ச தனது தாய்நாடு நோக்கி பறந்துவிட்டார். இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சிதறு தேங்காய் உடைப்பதுபோல சிதறியுள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மொட்டு கட்சி சிதறியுள்ளதால், அதிருப்தி நிலையில் உள்ளவர்கள் எம்முடன் இணைவார்கள். ஏனெனில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காக்க நாம் எதையும் செய்வோம் என்பது அவர்களுக்கு தெரியும்.

மக்கள் ஆணையைக் காக்கவே நாம் அமைச்சு பதவிகளை இழந்தோம். மாறாக சலுகைகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது.” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply