மின்சாரத் தடையால் ரயில் சேவையில் தாமதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரயில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

எனினும், கொழும்பின் சில பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி மீது அனைத்துக் குப்பைகளையும் கொட்டாதீர்கள்! மைத்திரி

Leave a Reply