புது டெல்லியில், இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இந்திய பெற்;றோலியத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார தோவால் ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த தந்திரோபய வழிமுறைகளின் தேவைகள் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் பற்றி இச் சந்திப்பில் கலந்துரையாட்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையில் பல்வேறு துறைசார்ந்த இருத்தரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான எதிர்கால நோக்கு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 90ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உயர் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.






