உவர்மலை பகுதியில் கைக்குண்டு மீட்பு!

திருகோணமலை – உவர்மலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

உவர்மலை லோவர் வீதியிலுள்ள கடற்கரைக்கு அருகில் கைக்குண்டு ஒன்று இருப்பதாக தலைமை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

இதனையடுத்து, கைக்குண்டு இருப்பதை உறுதி செய்து, திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனை வெடிக்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கைக்குண்டை விசேட பொலிஸ் அதிரடி படையினர் மீட்டதுடன் அதனை வெடிக்க வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிதி அமைச்சர் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Leave a Reply