கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், வினோநோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
ஐநா மனித உரிமை பேரவையின் 46.1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணித்தியாலம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.






