களனி பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மாணவன் முறைப்பாடு!

சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று தனது விரிவுரைகளின் பின்னர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழக விளையாட்டு திடலுக்கு சென்று கொண்டிருந்தபோது சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தான் தாக்கப்பட்டதாக குறித்த மாணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் குழு தன்னை பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று தலைமுடி மற்றும் தாடியை மழிக்குமாறும், சப்பாத்துகளுக்கு பதிலாக செருப்பு அணியுமாறு கூறியதாகவும், பின்னர், மூன்று பேர் தன்னை முகம் மற்றும் உடலில் தாக்கியதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது சம்பவ இடத்தில் 7 மாணவர்கள் இருந்ததாகவும் அவர்கள் பெயர் தெரியவில்லை எனவும், நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, தொடர்புடைய மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக கிரிபத்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply